Paristamil Navigation Paristamil advert login

பிரான்சின் கடைசி தொலைத்தொடர்பு பெட்டி.. அதிக பிரபலத்தன்மையால் மூடப்பட்டது..!!

பிரான்சின் கடைசி தொலைத்தொடர்பு பெட்டி.. அதிக பிரபலத்தன்மையால் மூடப்பட்டது..!!

23 ஆடி 2024 செவ்வாய் 12:36 | பார்வைகள் : 3839


முன்னரெல்லாம் தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ள, பொது இடங்களில் தொலைபேசி பெட்டிகள் வைக்கப்பட்டிப்பதை நாம் கண்டிருப்போம். ஆனால் இப்போதெல்லாம் கைத் தொலைபேசிகள் அதை இலகுவாக்கியதால், அதுபோன்ற தொலைபேசி பெட்டிகளுக்கு தேவையற்றுப்போனது. ஆனாலும், தற்போது வரை செயற்பட்டுக்கொண்டு வந்த ஒரு பொது தொலைபேசி பெட்டி பிரான்சில் கடந்தவாரம் வரை இருந்தது. தற்போது அதற்கு ஏற்பட்ட அதிக பிரபலத்தன்மையால் அது மூடப்பட்டுள்ளது.

Haut-Rhin மாவட்டத்தில் உள்ள 160 பேர் மட்டுமே வசிக்கும் சிறிய கிராமம் ஒன்றில் இந்த தொலைபேசி பெட்டி செயற்பட்டுக்கொண்டிருந்தது. மாதத்துக்கு ஐந்து அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டாலே அதிசயம் தான். ஆனாலும் Orange நிறுவனம் அதனை பராமரித்துக்கொண்டு வந்தது.

இந்நிலையில், சென்ற மாதம் உள்ளூர் பத்திரிகை ஒன்று மேற்படி தொலைத்தொடர்பு பெட்டி குறித்த செய்தியினையும், அதன் தொலைபேசி இலக்கத்தினையும் கட்டுரையாக வெளியிட்டிருந்தது. அன்றில் இருந்து ஆரம்பித்தது பிரச்சனை.

குறித்த தொலைபேசிக்கு எண்ணற்ற அழைப்புக்களை மக்கள் மேற்கொள்ளத்தொடங்கினார்கள். 20 நிமிடத்தில் 15 அழைப்புகளாவது வந்து சேரும். தொலைபேசி பெட்டியின் மணி எப்போதும் ஒலித்துக்கொண்டே இருந்துள்ளது. அதனை எடுத்துப் பேச ஒருவரும் இருக்கமாட்டார்கள்.

சிலர் ஆர்வம் மிகுதியில் அதனை எடுத்துப் பேசி, உரையாடி தெரியாத நபருடன் நட்பு பாராட்டியதும் உண்டு.

இந்நிலையில், அந்த அழைப்புக்களின் தொல்லையே வில்லங்கமாக மாற, அதன் செயற்பாட்டை நிறுத்துவதாக Orange நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

பல நூறு சுற்றுலாப்பயணிகள் அக்கிராமத்துக்கு வந்துசெல்ல காரணமாக அமைந்த அந்த தொலைத்தொடர்பு பெட்டி மூடப்படுவது தொடர்பில் அக்கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்