ஒலிம்பிக் : இளைஞன் ஒருவரைக் கைது செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர்..!!

23 ஆடி 2024 செவ்வாய் 17:43 | பார்வைகள் : 9446
ஒலிம்பிக் போட்டிகளின் போது அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு 18 வயதுடைய இளைஞன் ஒருவரை பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பிரான்சின் தென்மேற்கு ம்ாவட்டமான Gironde இல் இக்கைது சம்பவம் இன்று ஜூலை 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு காவல்துறையினர் (Direction générale de la sécurité intérieure) இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டிருந்தனர்.
தீவிரவாத தாக்குதல் சதித்திட்டம் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த இளைஞன் ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளும் முனைப்புடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞன் சமூகவலைத்தளங்களூடாக சமூக விரோத கருத்துக்களை வெளியிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1