Paristamil Navigation Paristamil advert login

’ஓகஸ்ட்டில் புதிய அரசாங்கம்’- ஜனாதிபதி நேர்காணல் : (பகுதி 02 - nouveau gouvernement)

’ஓகஸ்ட்டில் புதிய அரசாங்கம்’- ஜனாதிபதி நேர்காணல் : (பகுதி 02 - nouveau gouvernement)

24 ஆடி 2024 புதன் 06:09 | பார்வைகள் : 3563


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் நேற்று ஜூலை 23, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி நேர்காணலில் கலந்துகொண்டார். அரசியல் குழப்பங்கள் ஒரு புறமும், ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம் ஒருபுறமும் என பரபரப்பான சூழ்நிலை இருக்க, மக்ரோனின் இந்த நேர்காணல் மிக அவசியமான ஒன்றாக அமைந்திருந்தது. 

 

ஓகஸ்ட் மாதத்தில் புதிய அரசாங்கம்!

பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்து இரண்டு வாரங்களை முழுமையாக கடந்த நிலையில், புதிய அரசாங்கம் தொடர்பான அறிவித்தல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பிரதமர் கப்ரியல் அத்தாலின் பதவி விலகல் கடித்தை ஜனாதிபதி மக்ரோன் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், புதிய அரசாங்கம் ஓகஸ்ட் மாத நடுப்பகுதியில் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார். “நாங்கள் ஒலிம்பிக்கில் கவனம் செலுத்த வேண்டிய கட்டயத்தில் இருக்கிறோம். புதிய பிரதமரை நியமிப்பது என்னுடைய பொறுப்பாகும்.’ என அவர் தெரிவித்தார்.

 

இடதுசாரிக் கூட்டணி பிரதமர் நிராகரிப்பு!

நடைபெற்ற பொதுத்தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி (nouveau front populaire) அதிகூடிய ஆசனங்களை பெற்றிருந்தது. அக்கூட்டணி சார்பாக நீண்ட போராட்டத்துக்கு பின்னர் Lucie Castets எனும் அனுபவம் வாய்ந்த அரசியல் ஆளுமையை பிரதமராக நியமிக்க தயாராகியுள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இதனை ஜனாதிபதி மக்ரோன் உடனடியாக நிராகரித்தார். ‘nouveau front populaire கூட்டணிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பது பொய்யானது. அது எதுவாக இருந்தாலும்’ என திட்டவட்டமாக தெரிவித்தார். உடனடியாகவே இந்த கருத்து அரசியல் மட்டங்களில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

கைகுலுக்க மறுத்த இடதுசாரியினர்..!

Rassemblement National கட்சியைச் சேர்ந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் Flavien Termet உடன், இடதுசாரி கட்சி La France Insoumise இன் தலைவர்  Francois Piquemal கைகுலுக்க மறுத்த செய்தி அறிந்ததே. இந்த சம்பவத்துக்கு ஜனாதிபதி மக்ரோன் கண்டனம் தெரிவித்தார். சட்டபூர்வமாக தேர்வுசெய்யப்பட்டவரை அவமதிப்பது போலாகும் என மக்ரோன் குறிப்பிட்டார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்