சீனாவில் ஓய்வு வயதின் அளவு அதிகரிப்பு
25 ஆடி 2024 வியாழன் 09:39 | பார்வைகள் : 3584
சீனாவில் வயதானோர் அதிகரிப்பு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.
சீனாவில் கடந்த சில தசாப்தங்களாக மக்களின் சராசரி ஆயுள் கணிசமாக உயர்ந்துள்ளது.
1949-ல் 36 ஆண்டுகளாக இருந்த சராசரி ஆயுள் தற்போது 78 ஆண்டுகளாக உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் வயதானோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
சீனாவின் தற்போதைய ஓய்வு வயது வரம்பு பல சவால்களை எழுப்பியுள்ளது. இருப்பினும், கடந்த 75 ஆண்டுகளாக ஆண்களுக்கு 60 வயதிலும், பெண்களுக்கு 55 வயதிலும் ஓய்வு வழங்கப்பட்டு வந்த நிலை தொடர்ந்துள்ளது.
இதன் காரணமாக, ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது நாட்டின் பொருளாதாரத்திற்கு சுமையாக அமைந்தது.
இந்நிலைமையை கருத்தில் கொண்டு, சீன அரசு ஓய்வு வயது வரம்பை உயர்த்தும் முடிவை எடுத்துள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் படிப்படியாக இந்த மாற்றம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் ஓய்வூதியச் செலவைக் குறைத்து, நாட்டின் பொருளாதாரத்தை சீரடையச் செய்யலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.