Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி நாளை!

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் திகதி அடங்கிய வர்த்தமானி நாளை!

25 ஆடி 2024 வியாழன் 10:05 | பார்வைகள் : 5530


ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி உள்ளிட்ட தகவல்களை அறிவித்து நாளைய தினம் அதிவிசேட வர்த்தமானியை வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

 
இன்றையதினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இதன்படி தேர்தல் திகதி, வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்படவுள்ள காலப்பகுதி உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு இந்த விசேட வர்த்தமானி நாளையதினம் (26) வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்