பிரதமர் பதவியை கோரும் நாமல் ராஜபக்ஷ
25 ஆடி 2024 வியாழன் 14:41 | பார்வைகள் : 12718
ஜனாதிபதித் தேர்தலில் கட்சிக்கு அப்பாற்பட்ட வேட்பாளருக்கு ஆதரவளித்தால், அடுத்த அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும் என அதன் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லமான விஜேராம மாவத்தையில் நேற்று சந்தித்து, எதிர்வரும் அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மொட்டு கட்சியின் ஸ்தாபகர் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் குழுவொன்று இந்த சந்திப்பில் இணைந்திருந்தது.


























Bons Plans
Annuaire
Scan