Paristamil Navigation Paristamil advert login

தடைப்பட்டுள்ள TGV சேவை.. - Montparnasse நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்!

தடைப்பட்டுள்ள TGV சேவை.. - Montparnasse நிலையத்தில் குவிந்துள்ள பயணிகள்!

26 ஆடி 2024 வெள்ளி 06:41 | பார்வைகள் : 6386


TGV தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதன் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் Montparnasse நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்துள்ளனர்.

பரிசில் இருந்து பிரான்சின் மேற்கு நோக்கி பயணிக்கும் குறித்த அதிவேக தொடருந்து சேவை தீ விபத்து ஒன்றின் காரணமாக இன்று காலை முதல் தடைப்பட்டுள்ளது. Eure-et-Loir மாவட்டத்தின் Courtalain பகுதியில் தண்டவாளத்துக்கு அருகே ஏற்பட தீ பரவலினால் இந்த தடை ஏற்பட்டதாகவும், பரிசில் இருந்து Tours நகருக்கும், Le Mans நகருக்குமான இரு வழிச் சேவைகளும் தடைப்பட்டுள்ளன.

அதையடுத்து, Montparnasse நிலையத்தில் ஏராளமான பயணிகள் இன்று காலை முதல் குவிந்துள்ளனர். போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்படுவது குறித்த தகவல்கள் எதுவும் SNCF தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்