இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
26 ஆடி 2024 வெள்ளி 10:50 | பார்வைகள் : 1647
இந்தோனேசியாவின் கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.
26 ஆம் திகதி அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீட்டர் ஆழத்தில் 121 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேசியா ஒரு தீவு நாடு. இது நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் பகுதியில் அமைந்திருப்பதால், அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்புகள் ஏற்படக்கூடிய பகுதியாகும்.