Paristamil Navigation Paristamil advert login

■ தொடருந்து வலையமைப்பு தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா..?? - பிரித்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்தி!!

■ தொடருந்து வலையமைப்பு தாக்குதலுக்கு பின்னணியில் ரஷ்யா..?? - பிரித்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்தி!!

26 ஆடி 2024 வெள்ளி 13:27 | பார்வைகள் : 4993


பிரான்சின் அதிவேக தொடருந்து வலையமைப்பு மீதான தாக்குதல்களின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் பரபரப்பு செய்திகள் வெளியிட்டுள்ளன.

இன்று காலை முதல் பிரான்சின் வடக்கு மற்றும் மேற்கு நோக்கிச் செல்லும் TGV அதிகவேக தொடருந்துகள் சேவைத்தடையை சந்தித்தித்துள்ளன. நேற்று நள்ளிரவின் பின்னர், பல்வேறு இடங்களில் தொடருந்து சமிக்ஞை கம்பிகளை எரிக்கப்பட்டும் தண்டவாளங்கள் சேதப்படுத்தப்பட்டும் இருந்தன. அதையடுத்து தொடருந்துகளின் இருவழி போக்குவரத்துக்களும் தடைப்பட்டன. (இது தொடர்பான முழுமையான செய்திகளை எமது தளத்தில் படிக்கலாம்.)

ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வினைக் காண பிரித்தானியாவில் இருந்து பலர் வருகை தர இருந்த நிலையில், Eurostar தொடருந்து தடைப்பட்டும், தாமதமாகவும் இயக்கப்பட்டது. இதனால் இலண்டனிலும் பயணிகள் பலர் காத்திருக்க நேர்ந்தது.

இந்நிலையில், இந்த தாக்குதலின் பின்னணியில், ரஷ்யா இருப்பதாக பிரித்தானிய ஊடகங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டுள்ளன. இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யா இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது அறிந்ததே. அதன் காரணமாக இரஷ்ய இருக்கலாம் என அவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ஒலிம்பிக் போட்டிகளின் போது தாக்குதல் ஒன்றை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த ஒருவரை கடந்த வாரம் பிரெஞ்சு பயங்கரவாத தடுப்புப்பிரிவினர் கைது செய்திருந்தனர். கைது செய்யப்பட்டவர் ஒரு ரஷ்யர் எனவும், இந்த தொடருந்து வலையமைப்பு தாக்குதல்களின் பின்னணியில் அவர்களே இருக்கலாம் எனவும் பிரித்தானியாவின் பிரபல பத்திரிகையான DailyMail செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி தற்போது பிரான்சில் பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்