Paristamil Navigation Paristamil advert login

வார இறுதி நாட்களில் ’தாமதத்தைச் சந்திக்கும் தொடருந்து சேவைகள்’ - EuroStar சேவைகளில் சிக்கல்..!

வார இறுதி நாட்களில் ’தாமதத்தைச் சந்திக்கும் தொடருந்து சேவைகள்’ - EuroStar சேவைகளில் சிக்கல்..!

26 ஆடி 2024 வெள்ளி 16:52 | பார்வைகள் : 3894


இன்று காலை முதல் தடைப்பட்டுள்ள TGV சேவைகள் நாளை வழமைக்குத்திரும்பும் என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TGV Est சேவைகள் நாளை சனிக்கிழமை காலை 6 மணிக்கு வழமைக்குத்திரும்பும் எனவும், வடக்கு ( l’axe Nord) நோக்கிச் செல்லும் சேவைகளில் 80-% சதவீதமான சேவைகள் இயக்கப்படும் எனவும், 1 தொடக்கம் 2 மணிநேரங்கள் வரை தாமதங்களைச் சந்திக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Brittany மற்றும் தென்மேற்கு சேவைகளில் 3 இல் 2 சேவைகள் இயக்கப்படும். அவையும் 2 மணிநேரங்கள் வரை தாமதத்தைச் சந்திக்கும்.

l’axe Atlantique சேவைகளில் முன்னேற்றம் இல்லை. திருத்தப்பணிகள் மிகுந்த தாமத்தை எடுக்கும் என்பதால், ஞாயிற்றுக்கிழமை வரை சேவைகள் இயக்கப்படுவது சந்தேகமே என SNCF தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பரிஸ்-இலண்டன் நகரங்களை இணைக்கும் Eurostar சேவைகளில் ஐந்தில் நான்கு மட்டுமே இயக்கப்படும். அவையும் 2 மணிநேரங்கள் வரை தாமதப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்