Paristamil Navigation Paristamil advert login

விபத்து.. 13 ஆம் இலக்க மெற்றோ சுரங்கத்துக்குள் சிக்கியது.. பயணிகள் வெளியேற்றம்..!!

விபத்து.. 13 ஆம் இலக்க மெற்றோ சுரங்கத்துக்குள் சிக்கியது.. பயணிகள் வெளியேற்றம்..!!

27 ஆடி 2024 சனி 13:56 | பார்வைகள் : 6777


இன்று சனிக்கிழமை நண்பகல் 13 ஆம் இலக்க மெற்றோ (ligne 13) தடைப்பட்டது. மெற்றோவில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சுரங்கம் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

பயணி ஒருவர் விபத்துக்குள்ளானதாக RATP நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அதை அடுத்தே போக்குவரத்து தடைப்பட்டது. ஆறு மெற்றோக்கள் சுரங்கத்துக்குள் நிறுத்தப்பட்டது. அவற்றில் மூன்றில் இருந்து பயணிகள் இறக்கப்பட்டு சுரங்கம் வழியாக வெளியேற்றப்பட்டனர்.

12.52 மணியில் இருந்து 2.30 மணி வரை போக்குவரத்து தடைப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்