முதலாவது தங்கப்பதக்கத்தை வென்ற பிரான்ஸ்..!

27 ஆடி 2024 சனி 18:32 | பார்வைகள் : 9641
ஒலிம்பிக் 2024 போட்டிகளின் முதல் நாளான இன்று, பிரான்ஸ் இதுவரை தங்கப்பதக்கம் உள்ளிட்ட மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியில் விளையாடி ('Rugby sevens') பிரான்ஸ் தனது முதலாவது தங்கத்தை சுவீகரித்துக்கொண்டது. Stade de France அரங்கில் இடம்பெற்ற இந்த போட்டியில் Fiji அணியை வீழ்த்தி தங்க பதக்கத்தை பெற்றுக்கொண்டது.
அதேவேளை, ஜூடோ விளையாட்டுப் பிரிவில் ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப்பதக்கங்களையும் பிரான்ஸ் வென்றுள்ளது.
60 கிலோ ஆண்கள் பிரிவில் Luka MKHEIDZE என்பவர் வெள்ளி பதக்கத்தையும்,, 48 கிலோ பெண்கள் பிரிவில் Shirine BOUKLI என்பவர் வெண்கல பதக்கத்தையும் வென்றுள்ளனர்.