Paristamil Navigation Paristamil advert login

நாளை - பிரான்சில் கடும் வெப்பம்.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

நாளை - பிரான்சில் கடும் வெப்பம்.. 13 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

27 ஆடி 2024 சனி 19:00 | பார்வைகள் : 2774


நாளை ஞாயிற்றுக்கிழமை பிரான்சின் சில மாவட்டங்களில் வழமைக்கு மாறாக அதிக வெப்பம் நிலவும் எனவும், வெப்பக்காற்று வீசும் (canicule) எனவும் வானிலை அவதானிப்பை மையம் எதிர்வு கூறியுள்ளது. 

இந்த வெப்ப அலை காரணமாக Savoie, Haute-Savoie, Landes, Gironde, Dordogne, Lot-et-Garonne, Gers, Corrèze, Lot, Haute-Garonne, Tarn, Haute-Corse, Tarn மற்றும் Tarn-et-Garonne ஆகிய 13 தென்மேற்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு, எச்சரிக்கை ‘செம்மஞ்சள்’ நிறத்தில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

சில மாவட்டங்களில் 34°C தொடக்கம் 36°C வரையும், ஒரு சில இடங்களில் அதிகபட்சமாக 37-38°C வரையான வெப்பமும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்