Paristamil Navigation Paristamil advert login

உலோக தொழிற்சாலையில் வெடிவிபத்து -  5 பேர் பலி

உலோக தொழிற்சாலையில் வெடிவிபத்து -  5 பேர் பலி

28 ஆடி 2024 ஞாயிறு 06:33 | பார்வைகள் : 2138


சீனாவின் ஹினன் மாகாணம் யங்க்சங் நகரில் உலோக தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த தொழிற்பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 

இந்த தொழிற்பூங்காவில் உலோக தொழிற்சாலையும் உள்ளது.

இதில் பலர் வேலை செய்து வருகின்றனர். உலோக தொழிற்சாலையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வழக்கமான பணிகளை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்து குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து காயமடைந்த 14 பேரை மீட்ட நிலையில் வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

உலோக தொழிற்சாலையில் உள்ள எந்திரம் திடீரென வெடித்ததே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில், உலோக தொழிற்சாலையின் உரிமையாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்