Paristamil Navigation Paristamil advert login

உள்துறை அமைச்சகத்தின் முகவரியுடன் அனுப்பப்பட்ட பொதி... அதில் இருந்த மர்மப்பொருள்..!

உள்துறை அமைச்சகத்தின் முகவரியுடன் அனுப்பப்பட்ட பொதி... அதில் இருந்த மர்மப்பொருள்..!

28 ஆடி 2024 ஞாயிறு 12:17 | பார்வைகள் : 5787


உள்துறை அமைச்சகத்தின் முகவரிக்கு அனுப்பப்படும் நோக்கில் பொதி ஒன்றை பிரெஞ்சு தபாலகம் பெற்றுள்ளது. அதில் இருந்த மர்மப்பொருளினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூலை 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை, ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாளின் போது ஒலிம்பிக் ஏற்பாடுகளை குறிவைத்து பல தாக்குதல்கள் நாசவேலைகள் இடம்பெற்றிருந்தன. அதில் ஒன்றாக இந்த சம்பவம் கருதப்படுகிறது. Côte-d'Or மவட்டத்தில் உள்ள Longvic நகரத்துக்கு சொந்தமான தபால் பெட்டி ஒன்றில்  பொதி ஒன்று இருந்துள்ளது. அந்த பொதியின் பெறுநர் முகவரியாக பரிசில் உள்ள உள்துறை அமைச்சகத்தின் முகவரி எழுதப்பட்டிருந்தது. குறித்த பொதி மீது சந்தேகம் கொண்ட ஊழியர், உடனடியாக காவல்துறையினரை அழைத்துள்ளார். 

பொதிக்குள் கடிதம் ஒன்றுடன், கறுப்பு நிறத்தில் தூள் (poudre noire) கொஞ்சம் இருந்துள்ளது. அது நிலவரத்தை மேலும் பதட்டமாக்கியது. உடனடியாக கதிரியல் இயக்கப்பிரிவு அழைக்கப்பட்டு குறித்த தூள் பரிசோதிக்கப்பட்டது. 

அது ப்ளேக் எனும் நோயை பரப்பக்கூடிய ஆபத்தான தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாகவே காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்தனர். அதனை அனுப்பியவர் யார் என்பது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்