ஒலிம்பிக் ஆரம்ப நிகழ்வில் Lady Gaga மற்றும் Aya Nakamura பாடிய பாடல்களில் சர்ச்சை!

28 ஆடி 2024 ஞாயிறு 13:17 | பார்வைகள் : 8936
ஒலிம்பிக் ஆரம்பநாள் நிகழ்வில் Lady Gaga, Aya Nakamura மற்றும் Céline Dion ஆகியோர் பாடல் பாடியிருந்தனர். இப்போது அதில் சர்ச்சை ஒன்று ஏற்பட்டுள்ளது.
Lady Gaga மற்றும் Aya Nakamura ஆகிய இருவரது பாடல்களும் நேரடியாக பாடப்படவில்லை எனவும், மாறாக முன்னதாக பதிவு செய்யப்பட்ட பாடல்களே அங்கு ஒலிக்கவிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பாடல்களின் இசையமைப்பாளர் Victor Le Masne இந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.
அந்த தகவல் கசிந்ததை அடுத்து, ரசிகர்கள் பெரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
'தொழில்நுட்ப கோளாறுகள் எதுவும் ஏற்படக்கூடாது' என்பதால் அவை முன்பதிவு செய்யப்பட்டு ஒலிபரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, Céline Dion பாடிய பாடல் நேரடியாக பாடப்பட்டது எனவும், இது அவர் விருப்பப்பட்டு நன்றாக ஒத்திகை பார்க்கப்பட்டு பாடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1