Paristamil Navigation Paristamil advert login

காங்., ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன: அனுராக் தாக்கூர் தாக்கு

காங்., ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன: அனுராக் தாக்கூர் தாக்கு

28 ஆடி 2024 ஞாயிறு 16:16 | பார்வைகள் : 1452


காங்கிரஸ் ஆட்சியில் வங்கிகள் சூறையாடப்பட்டன என முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., எம்.பி.,யுமான அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.

சண்டிகர் பா.ஜ., அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில், அனுராக் தாக்கூர் பேசியதாவது: 2014ல் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தபோது 12 வங்கிகளில் 11 வங்கிகள் நஷ்டத்தில் இருந்தன. மூடப்படும் நிலையில் இருந்த 12 வங்கிகளும் இன்று நிகர லாபத்தில் உள்ளன. எஸ்.பி.ஐ., வங்கியின் லாபம் மட்டும் ரூ.60,000 கோடியை எட்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில், அவர்களது நண்பர்களின் நலனுக்காக வங்கிகள் சூறையாடப்பட்டன.

முத்ரா யோஜனா
இன்று ஏழைகள் நலனுக்காக முத்ரா யோஜனா திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ரயில்வே பட்ஜெட்டைப் பார்த்தால், 30 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சியில் கொடுத்ததை விட அதிகமாக நாங்கள் கொடுத்துள்ளோம் என்பது தெரியும். எங்கள் ஆட்சியில் சாலைகள், ரயில்வே, கல்வி மற்றும் சுகாதார வளர்ச்சிக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய சகாப்தத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு வளர்ந்த நாடாக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார். 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்