Épinay-sur-Seine : திருமண வீட்டுக்குள் நுழைந்து.. சரமாரி தாக்குதல்.. - ஐவர் கைது..!

29 ஆடி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 10861
30 பேர் கொண்ட குழு ஒன்று திருமண நிகழ்வு ஒன்றுக்குள் நுழைந்து, அங்கிருப்பர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.
ஜூலை 27, சனிக்கிழமை இரவு இச்சம்பவம் Épinay-sur-Seine (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது திடீரென உள்நுழைந்த குழு ஒன்று அங்கிருந்த பலர் மீது தாக்குதல் மேற்கொண்டனர். இரும்பு கம்பிகளினால் இந்த தாக்குதலை மேற்கொண்டனர். திருமணத்துக்கு வருகை தந்த விருந்தினர்களும் தாக்குதலுக்கு இலக்காகினர்.
அதையடுத்து, காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். அவர்கள் விரைந்து சென்ற நிலையில், தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பி ஓடியுள்ளனர். அவர்களில் ஐவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.