Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதல் டைட்டானியம் செயற்கை இதயம்...

உலகின் முதல் டைட்டானியம் செயற்கை இதயம்...

29 ஆடி 2024 திங்கள் 08:38 | பார்வைகள் : 4640


உலகின் முதல் செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்றும் செயற்கை இதயத்தை அமெரிக்காவை சேர்ந்த Bivacor நிறுவனம் உருவாக்கியுள்ளது.

பிவென்ட்ரிகுலர் மற்றும் யூனிவென்ட்ரிகுலர் இதய செயலிழப்பு அபாயத்தில் உள்ளவர்களின் இதயத்தின் சுமையை குறைக்க இந்த செயற்கை இதயம் இதயத்தின் வேலைக்கு உதவ பயன்படுகிறது.

டெக்சாஸ் மருத்துவ மையத்தில் ஒருவருக்கு இந்த செயற்கை இதயம் பொருத்தப்பட்டதாக டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (Texas Heart Institute) மற்றும் BiVACOR நிறுவனம் அறிவித்துள்ளன.

இந்த செயற்கை இதயம் டைட்டானியத்தால் ஆனது.

உண்மையான இதயத்தை முழுமையாக மாற்ற இந்த செயற்கை இதயத்தை பயன்படுத்த முடியாது.

இதயம் செயலிழக்கும் ஆபத்தில் உள்ளவர்களுக்கு வேறொருவரின் இதயம் மாற்றப்படும் வரை இது ஒரு காப்புப் பிரதியாக செயல்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்