இலங்கையில் வாகன இறக்குமதி குறித்து மகிழ்ச்சியான அறிவிப்பு

29 ஆடி 2024 திங்கள் 09:40 | பார்வைகள் : 3316
இலங்கையில் வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு ஆரம்ப கட்டத்தில் அனுமதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, 2025 முதல் காலாண்டில் தனியாருக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்ய எதிர்பார்க்கிறோம் என்றார்.