தொலைத்தொடர்பு சேவைகள் மீது தாக்குதல்... ஆறு மாவட்டங்கள் பாதிப்பு..!!
29 ஆடி 2024 திங்கள் 11:14 | பார்வைகள் : 4071
தொடருந்து வலையமைப்பின் மீது தாக்குதல் இடம்பெற்ற இரண்டு நாட்களில் பின்னர் தற்போது தொலைத்தொடர்பு வலையமைப்புக்கள் மீது நாசகார வேலைகள் இடம்பெற்றுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதை எதிர்க்கும் சிலர் இந்த நாசவேலைகளில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இன்று ஜூலை 29, திங்கட்கிழமை காலை முதல் பிரான்சின் ஆறு மாவட்டங்களில் இணைய தொடர்பு கம்பிகள் அறுக்கப்பட்டும், தீவைக்கப்பட்டும் உள்ளன. குறிப்பாக 4G சேவைகளை வழங்கும் இணையத்தொடர்பும், 5G இணைய சேவைகளை வழங்கும் FIBER கம்பிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன.
SFR தொலைத்தொடர்பு நிறுவனத்தின் கம்பிகளே இவ்வாறு சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Aude, Bouches-du-Rhône, Drôme, Hérault, Meuse, Oise ஆகிய ஆறு மாவட்டங்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
10,000 இற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இணையம் தடைப்பட்டுள்ளது. 25 தொலைபேசி கோபுரங்கள் வழியாக இணைய சேவை தடைப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.