மேஜர் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணி
29 ஆடி 2024 திங்கள் 12:30 | பார்வைகள் : 899
மேஜர் லீக் கிரிக்கெட் கிண்ணத்தை ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான வாஷிங்டன் ஃப்ரீடம் அணி கைப்பற்றியது.
டல்லாஸில் நடந்த மேஜர் லீக் தொடர் இறுதிப்போட்டியில் வாஷிங்டன் ஃப்ரீடம் (Washington Freedom) மற்றும் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் (San Francisco Unicorns) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற சான் பிரான்சிஸ்கோ அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ அணியில் ஸ்டீவன் ஸ்மித் (Steven Smith) மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினர்.
ஸ்மித் 52 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 22 பந்துகளில் 4 சிக்ஸர், ஒரு பவுண்டரியுடன் 40 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் வாஷிங்டன் அணி 5 விக்கெட்டுக்கு 207 ஓட்டங்கள் குவித்தது. கம்மின்ஸ் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினார். பின்னர் களமிறங்கிய சான் பிரான்சிஸ்கோ 16 ஓவரில் 111 ஓட்டங்களுக்கு சுருண்டது.
96 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வாஷிங்டன் ஃப்ரீடம் சாம்பியன் ஆனது. வாஷிங்டன் ஃப்ரீடம் அணியின் தரப்பில் மார்கோ ஜென்சென், ரச்சின் ரவீந்திரா தலா 3 விக்கெட்டுகளும், ஆண்ட்ரு டை 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.