கனடாவின் ஹாலிபெக்ஸில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் காயம்

29 ஆடி 2024 திங்கள் 12:52 | பார்வைகள் : 4757
கனடாவின் ஹாலிஃபிக்ஸ் பிராந்தியத்தில் ஆப்பிரிக்வெலி பார்க் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
இரண்டு பேர் ஒருவருக்கு ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது அருகாமையில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை ஆபத்தானது என தெரிவிக்கப்படுகிறது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நகரின் மேயர் மைக் சர்வேஷ் தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் ஹாலிபெக்ஸ் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.