Paristamil Navigation Paristamil advert login

கமலா ஹாரிசுக்கு  அதிகரிக்கப்படும்  ஆதரவு

கமலா ஹாரிசுக்கு  அதிகரிக்கப்படும்  ஆதரவு

29 ஆடி 2024 திங்கள் 12:59 | பார்வைகள் : 1858


அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5 ஆம் திகதி நடைபெற உள்ளது.

 இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.


ஆளும் ஜனநாயகக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.  

எனினும் அவர் மீதான  சில சம்பங்களால்தேர்தலில் இருந்து தற்போதைய அதிபர் பைடன்  விலகிய நிலையில்   ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபரான இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிசை முன்மொழிவதாக அவர் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான தனது பரப்புரையை கமலா ஹாரிஸ் தொடங்கினார்.

அவருக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கமலா ஹாரிசை அதிபர் வேட்பாளராக பலர் ஆதரிக்கத் தொடங்கியதும், அமெரிக்காவின் தேர்தல் களம் தலைகீழாக மாறியுள்ளது.

பிரசாரத்தை தொடங்கிய ஒருவார காலத்தில் கமலா ஹாரிஸ் தேர்தல் நிதியாக 200 மில்லியன் டாலர் தொகையை திரட்டியுள்ளார். இந்த நிதியை வழங்கியுள்ளவர்களில் 66 சதவீதம் பேர் முதல் முறையாக நன்கொடை அளிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.


இந்த நிலையில் கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு அதிபர் தேர்தல் குறித்து புதிய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன.

குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்பை விட துணை அதிபர் கமலா ஹாரிஸ் 2 சதவீதம் அதிக புள்ளிகள் பெற்று முன்னிலையில் இருப்பதாக அந்த கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டது.


நாளுக்கு நாள் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. இந்த கருத்துக்கணிப்பு டொனால்ட் டிரம்புக்கு எதிரான அமெரிக்கர்களின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது டிரம்ப் ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்