Paristamil Navigation Paristamil advert login

பிரிட்டனின் சௌத்போர்ட்டில்  கத்திக்குத்து தாக்குதல் 

 பிரிட்டனின் சௌத்போர்ட்டில்  கத்திக்குத்து தாக்குதல் 

30 ஆடி 2024 செவ்வாய் 08:14 | பார்வைகள் : 601


பிரிட்டனின் சௌத்போர்ட்டில் நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

பிரிட்டனின் சௌத்போர்ட்டில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இரத்தக்காயங்களுடன் நடனவகுப்பிலிருந்து சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

நடனவகுப்பிலிருந்து இரத்தக்காயங்களுடன் காணப்பட்ட பிள்ளைகளை தூக்கியவாறு பெற்றோர் வெளியே ஒடியதையும் அவர்களை காப்பாற்ற முடிந்ததையும் பார்த்ததாக அலைனா ரிலே என்பவர் தெரிவித்துள்ளார்.

 பெற்றோர் செயற்கை சுவாசத்தை வழங்க முற்பட்டதை நான் பார்த்தேன்,அவர்கள் பிள்ளைகளை கரங்களில் பற்றியிருந்தனர் அந்த வகுப்பு முடிவடையும் தருணத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நான் ஒருபோதும் அவ்வாறான அலறல்களை கேட்டதில்லை, எனஅவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் சௌத்போர்ட்டில் நடத்தப்பட்ட கத்தி குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் மேலும் 09 சிறுவர்கள் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 06 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதுடன் , இரு பெரியவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறுவர்களின் கலை நிகழ்ச்சி ஒன்றிலேயே இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த கத்திகுத்தை மேற்கொண்ட 17 வயதான நபரொருவர் பொலிஸாரால் கைது செய்துள்ளனர்.


எதற்காக இந்த கத்தி குத்து நடத்தப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை என்பதுடன், இது தீவிரவாத தாக்குதல் கிடையாது என பிரிட்டன் பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்