Paristamil Navigation Paristamil advert login

கடும் வெப்ப அலை எச்சரிக்கை!! மாவட்டங்கள் விபரங்கங்கள்!! - வெளியே செல்ல வேண்டாம்!!

கடும் வெப்ப அலை எச்சரிக்கை!! மாவட்டங்கள் விபரங்கங்கள்!! - வெளியே செல்ல வேண்டாம்!!

30 ஆடி 2024 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 2607


இன்று பிரான்ஸ் முழுவதும் அதியுச்ச வெப்பநிலை நிலவுகின்றது. பரிஸ் மற்றும் அதன் புறநகரங்களில் இன்று 35 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்துள்ளது.

இதை விட மிக மோசமாக பிரான்சின் பல பகுதிகள் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலைக்கு உள்ளாகின்றது.

தேவையேற்படின் அன்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும் வெளிப்பகுதிகளில் உடற்பயிற்சிகளைத் தவிர்க்குமாறும் பிரான்சின் வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

அத்துடன் பிரான்சின் 56 மாவட்டங்களிற்கு கடுமையான வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Ain, Allier, Alpes-Haute-Provence, Alpes-Maritimes, Ardèche, Ariège, l’Aveyron, Cantal, Charente, Charente-Maritime, Cher, Corrèze, Corse-du-Sud, Haute-Corse, Dordogne, Drôme, Gard, Haute-Garonne, Gers, Gironde, Indre-et-Loire,Isère.Landes, Loire, Haute-Loire, Lot, Lot-et-Garonne, Puy-de-Dôme, Hautes-Pyrénées, le Rhône, la Savoie, la Haute-Savoie, les Deux-Sèvres, le Tarn, le Tarn-et-Garonne, le Vaucluse, la Vendée, la Vienne, la Creuse, les Pyrénées-Atlantiques, Haute-Vienne, Indre, Nièvre, Saône-et-Loire,Jura. ஆகிய மாவட்டங்களிற்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மற்றைய மாவட்டங்களிலும் எச்சரிக்கை தேவையென வானிலை மையம் தெரிவித்துள்ளது.


நாளை மேலும் பல மாவட்டங்களிற்கு இந்த வெப்ப அலை எச்சரிக்கை விரிவடையும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்