விஷால் - லைகா இடையிலான வழக்கில் நடந்தது என்ன ?
30 ஆடி 2024 செவ்வாய் 14:19 | பார்வைகள் : 1340
லைகா நிறுவனத்தின் மீது நடிகர் விஷால் தாக்கல் செய்த வழக்கில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஷால் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ’சண்டக்கோழி 2’ என்ற திரைப்படத்தின் தமிழ் தெலுங்கு திரையரங்கு மற்றும் சேட்டிலைட் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனத்திடம் விற்பனை செய்திருந்த நிலையில் இந்த படத்திற்காக கடந்த 2018 ஆம் ஆண்டு 23 கோடியே 21 லட்சத்துக்கு ஒப்பந்தம் போடப்பட்டு படம் வெளியானது.
ஆனால் இந்த தொகைக்கு 12 சதவீத ஜிஎஸ்டி தொகையை லைகா நிறுவனம் செலுத்தவில்லை என்றும் அதனால் அந்த தொகையை அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் லைகா ஒரு வெளிநாட்டு நிறுவனம் என்பதால் நிறுவனத்தை மூடிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் எனவே தனது தனக்கு சேர வேண்டிய தொகையை வட்டியுடன் செலுத்த உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்து இருந்தார்..
இந்த நிலையில் இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தபோது மத்தியஸ்தம் பேச்சு வார்த்தைக்கு அனுப்ப கோரிக்கை விடுத்து லைகா நிறுவனம் சார்பில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது விஷால் வழக்கறிஞர் ’ஜிஎஸ்டி நிலுவை தொகை தொடர்பாக விஷால் மற்றும் லைகா நிறுவனத்தின் இடையே சமரச தீர்வு ஏற்பட்டிருப்பதாக தெரிவித்ததை அடுத்து இந்த வழக்கை நீதிபதி முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்தார்.