Paristamil Navigation Paristamil advert login

Livry-Gargan : சிறையில் இருந்து விடுதலையானவர் - துப்பாக்கிச்சூட்டில் பலி!

Livry-Gargan : சிறையில் இருந்து விடுதலையானவர் - துப்பாக்கிச்சூட்டில் பலி!

31 ஆடி 2024 புதன் 08:45 | பார்வைகள் : 7206


Livry-Gargan (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று ஜூலை 30 செவ்வாய்க்கிழமை இரவு இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

48 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். ஸ்கூட்டர் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் இருவர் Kalashnikov ரக துப்பாக்கியால் குறித்த நபரை நடுவீதியில் வைத்து சுட்டுள்ளார்.

காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். மருத்துவ உதவிக்குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்தடையும் முன்னரே குறித்த நபர் உயிரிழந்ததாகவும், நான்கு தடவைகள் அவர் சுடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலியான நபரை காவல்துறையினர் நன்கு அறிவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் மிக சமீபத்திலேயே சிறையில் இருந்து விடுதலையானவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்