EV Bike பேட்டரியை Lift -க்குள் எடுத்துச் சென்றால் வெடிக்குமா? உண்மை தகவல் என்ன
31 ஆடி 2024 புதன் 09:19 | பார்வைகள் : 1389
மின்சார பைக்கின் பேட்டரியை லிப்டிற்குள் எடுத்து சென்றால் வெடித்து சிதறி உயிருக்கு ஆபத்து ஏற்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
சமீப காலமாகவே எலக்ட்ரானிக் சாதன பொருட்கள் வெடித்தி சிதறி பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனால், எலக்ட்ரானிக் பொருட்களை பயன்படுத்துவதற்கும் மக்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில், அண்மையில் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று பரவி அதிர்ச்சியை கொடுத்தது.
அதாவது, நபர் ஒருவர் லிப்டிற்குள் செல்லும்போது கையில் EV Bike பேட்டரியை எடுத்துச் செல்கிறார். அவர் உள்ளே சென்றதும் லிப்ட் கதவு மூடியது.
பின்னர், அடுத்த நொடியே மின்சார வாகனத்தின் பேட்டரி பயங்கர சத்ததுடன் வெடித்து சிதறுகிறது. இந்த சத்தம் கேட்ட அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் வந்து பார்த்ததும் லிப்டிற்குள் அந்த நபர் பலத்த தீக்காயங்களுடன் இருந்துள்ளார். பின்னர் அவரை மீட்டனர்.
இதையடுத்து தான், லிப்டிற்குள் EV Bike பேட்டரியை கொண்டு சென்றால் பேட்டரியின் எலக்ட்ரோ சார்ஜ், மொத்த லிப்டையும் மேக்னெட் பேட்டரியாக மாற்றிவிடும் என்று தகவல் பரவியது. இதனால் பலரும் அச்சத்துடன் இருந்தனர்.
இந்நிலையில், லிப்டிற்குள் EV Bike பேட்டரியை கொண்டு சென்றால் ஆபத்து ஏற்படுமா என்று Engineering Facts என்ற Facebook பக்கத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில், "எலக்ட்ரோ சார்ஜ் (Electro charge) என்ற கான்செப்டே கிடையாது. எலக்ட்ரிக் சார்ஜ் (Electric charge) என்பது தான் உள்ளது. மேக்னடிக் பேட்டரி (magnetic battery) என்றும் மேக்னடிக் ஃபீல்டு (Magnetic field) என்றும் சொல்கிறார்கள்.
ஆனால், பேட்டரியில் மேக்னடிக் ஃபீல்டு (Magnetic field) உருவாகாது. எலக்ட்ரான் நகரும் இடத்தில் தான் மேக்னெட்டிக் ஃபீல்டு உருவாகும். பேட்டரியில் எலக்ட்ரான் சேர்ந்து தான் இருக்கும். அதனால் அது நகராது.
இந்த சம்பவத்திற்கு பேட்டரி அதிக வெப்பம் அடைதல், over Charger, over discharger போன்ற காரணங்கள் இருக்கலாம்.
லிப்டின் கதவு மூடியதற்கும் EV Bike பேட்டரி வெடித்ததற்கும் காரணம் இல்லை. லிப்ட் மூடியதும் உடனே வெடித்ததால் அதனை காரணமாக சொல்கின்றனர்" என்று கூறியுள்ளனர்.