ஒலிம்பிக் : இதுவரை 68 இணைய வழி தாக்குதல்கள் முறியடிப்பு!
31 ஆடி 2024 புதன் 15:10 | பார்வைகள் : 3916
ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 68 இணையவழித்தாக்குதல்கள் ’cyberattaques’ முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கப்ரியல் அத்தால் தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளின் போது இந்த இணையவழி தாக்குதல்கள் அதிகமாக இடம்பெறலாம் என தேசிய இணைய பாதுகாப்பு அமைப்பு (l'Agence nationale de la sécurité des systèmes d'information) எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி மொத்தமாக 68 தாக்குதல்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டு அவை முறியடிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.
அரச இணையத்தளங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களின் இணையத்தளங்கள், ஒலிம்ப்பிக் போட்டிகளுக்கான இணையத்தளங்கள் போன்றவற்றின் மீது இந்த தாக்குதல்கள் இடம்பெற்றிருந்ததாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.