சாருஹாசன் மருத்துவமனையில் அனுமதி..!
31 ஆடி 2024 புதன் 15:11 | பார்வைகள் : 2052
பிரபல நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும், பிரபல நடிகை சுஹாசினியின் தந்தையுமான நடிகர் சாருஹாசன் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகேந்திரன் இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான ‘உதிரிப்பூக்கள்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் சாருஹாசன். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழில்களில் பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
கன்னட மொழியில் ‘தபரன கதே’ என்ற படத்தில் இவரின் அபரா நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. பல படங்களில் நடித்த சாருஹாசன், கடைசியாக மைக் மோகனின் கம்பேக் திரைப்படமான ‘ஹரா’ படத்தில் நடித்திருந்தார். தற்போது இவருக்கு 91 வயதாகிறது, வயது மூப்பின் காரணமாக நடிகர் சாருஹாசனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவமனையில் தந்தையை கவனித்து வரும் நடிகை சுஹாசினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை சாருஹாசனின் உடல்நலம் குறித்து பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள பதிவில், தந்தையை கட்டியணைத்தபடி இருக்கும் புகைப்படத்துடன் ‘இதை விடுமுறை என்பதா? அல்லது தந்தையின் மருத்துவநிலைக்காக அவருடன் தங்கியுள்ளேன் என்பதா? மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அவரது மகள்களின் அன்பாலும், அரவணைப்பாலும் நன்றாக குணமடைந்து வருகிறார்" என்று குறிப்பிட்டுள்ளார்.