முருங்கை கீரை சாதம்
31 ஆடி 2024 புதன் 15:05 | பார்வைகள் : 461
முருங்கை இலை மிகவும் எளிதாக கிடைக்கும் பொருள்களில் ஒன்று. இதில் அதிக அளவிலான சத்துக்கள் உள்ளன. முருங்கை கீரையில் இரும்பு சத்து நிரம்பியுள்ளது. அத்தகைய சத்துகளை கொண்டுள்ள முருங்கை கீரையை கொண்டு சுவையான முருங்கை கீரை சாதம் எப்படி செய்யலாம் என்பதை வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பச்சரிசி - ஒரு கப்
துவரம் பருப்பு - கால் கப்
முருங்கை கீரை - அரை கப்
பெரிய வெங்காயம் - 1
உப்பு - தேவையான அளவு
நெய் - 2 டீஸ்பூன்
வறுத்து அரைக்க:
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்
பச்சரிசி - 2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4
தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ் ஸ்பூன்
தாளிக்க :
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ் ஸ்பூன்
பூண்டு - 3 பல்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை :
முதலில் அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாக கழுவி அதனுடன் உப்பு சேர்த்து மூன்றே முக்கால் தண்ணீர் ஊற்றி குக்கரில் வேக வைக்க வேண்டும்.
2 விசில் வந்ததும் தீயை குறைத்து 5 நிமிடம் கழித்து குக்கரை இறக்கி கொள்ள வேண்டும். வெங்காயத்தை பொடியாக நறுக்கி பூண்டு பல்லை சிறு சிறு துண்டுகளாக நசுக்கி வைத்து கொள்ள வேண்டும்.
வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வறுத்து வைத்து அதனை பொடியாக்கி கொள்ளுங்கள்.
எண்ணெய் காய வைத்து கடுகு, உளுத்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சோற்றில் சேர்த்து கொள்ளுங்கள்
அத்துடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும்,நெய்யையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து கொள்ளுங்கள். சுவையான முருங்கை கீரை சோறு ரெடிபாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, முருங்கை கீரை, காய்ந்த மிளகாய் தாளித்து, பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி சாதத்துடன் சேர்த்துகொள்ள வேண்டும்.
அதனுடன் வறுத்து பொடித்து வைத்துள்ள பொடியையும்,நெய்யையும் சேர்த்து ஒன்றாக சேர்த்து கொண்டால் சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை சாதம் தயார்.