Paristamil Navigation Paristamil advert login

உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஒலிம்பிக் நட்சத்திர வீரர்

உலக மக்களின் கவனத்தை ஈர்த்த ஒலிம்பிக் நட்சத்திர வீரர்

1 ஆவணி 2024 வியாழன் 09:47 | பார்வைகள் : 462


துருக்கியை சேர்ந்த ஒலிம்பிக் நட்சத்திரம் ஒருவரின் புகைப்படம் ஒன்று, சமூக ஊடகங்களில் தீயாக பரவி வருகிறது.

துருக்கியை சேர்ந்த துப்பாக்கிச் சுடும் வீரர் Yusuf Dikec. இவரது புகைப்படமே தற்போது இணையத்தில் தீயாக பரவி வருவதுடன், மொத்த மக்களும் கொண்டாடி வருகின்றனர்.

51 வயதான Yusuf Dikec மற்றும் இவருடன் விளையாடிய Sevval Ilayda Tarhan ஜோடி பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. ஆனால் அவர் இணையத்தில் கொண்டாடப்படுவது பதக்கம் வென்றதனால் அல்ல.

போட்டிக்கான அவரது வழக்கத்திற்கு மாறான அணுகுமுறையே மொத்த மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக துப்பாக்கிச் சுடும் வீரர்கள் அதற்குரிய பாதுகாப்பு அம்சங்கள் மொத்தவும் அணிந்து போட்டியில் கலந்துகொள்வார்கள்.

ஆனால் Yusuf Dikec அப்படியல்ல. மிகவும் நிதானமாக, வழக்கமாக துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கான எந்த தோரணையும் இன்றி, பாக்கெட்டில் ஒரு கையை வைத்துக் கொண்டு அவர் போட்டியில் கலந்துகொள்ளும் அந்த காட்சியே இணயத்தைக் கொண்டாட வைத்துள்ளது.

வழக்கமாக துப்பாக்கிச் சுடும் வீரர்கள் கண்களுக்கான சிறப்பு லென்ஸ், காதுக்கான பாதுகாப்பு என பலவற்றை பயன்படுத்துவார்கள். ஆனால் இவை ஏதுமின்றி Yusuf Dikec வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

இவரது இந்தப் புகைப்படம், பல சமூக ஊடகப் பயனர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. துருக்கி ஒரு வாடகை கொலையாளியை போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளதா என ஒருவர் விளையாட்டாக கேள்வி எழுப்பியுள்ளார்.

Yusuf Dikec ஐந்தாவது முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்கிறார். இந்த முறை தங்கப்பதக்கத்தை மிக குறைந்த புள்ளிகளில் தவற விட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்