இலங்கை வெற்றிப் பின் பேசிய சூர்யகுமார் யாதவ்
1 ஆவணி 2024 வியாழன் 09:52 | பார்வைகள் : 573
தமது அணி வீரர் தன் வேலையை எளிதாக்கிவிட்டதாக இந்திய அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு எதிரான டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதன்மூலம் சூர்யகுமார் யாதவ் பாராட்டுகளை பெற்று வருகிறார். உலகின் சிறந்த டி20 வீரர்களில் சூர்யகுமார் யாதவும் தற்போது ஒருவர் என ரவிசாஸ்திரி புகழ்ந்துள்ளார்.
இந்த நிலையில் வெற்றி குறித்து பேசும்போது, ''இந்த தொடருக்கு முன்பே நான் கூறியதுபோல், நான் கேப்டனாக விரும்பவில்லை, தலைவராக வேண்டும்.
சக அணி வீரர்களிடம் இருக்கும் திறமை எனது வேலையை எளிதாக்குகிறது.
நேர்மறை எண்ணம், ஒருவருக்கொருவர் மீதான அக்கறை நம்ப முடியாதது. நான் துடுப்பாடியபோது அழுத்தம் குறைவாகவே இருந்தது'' என சூர்யகுமார் யாதவ் தெரிவித்தார்.