Paristamil Navigation Paristamil advert login

கார போண்டா

கார போண்டா

1 ஆவணி 2024 வியாழன் 10:09 | பார்வைகள் : 934


குழந்தைகளுக்கு ஈவ்னிங் சுட சுட மொறு மொறுப்புடன் கூடிய கார போண்டா செய்து கொடுங்க. கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. வாங்க எப்படி செய்யலாம்னு தெரிஞ்சுக்கலாம்.

தேவையான பொருட்கள் :

பச்சை அரிசி - 1 கப்
உளுந்து - 1 கப்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
உப்பு - 1 tsp
பெருங்காயத்தூள் - 1/2 tsp
எண்ணெய் - 200 கிராம்
கறிவேப்பிலை - 1கொத்து
கொத்தமல்லி - 1 கைப்பிடி

செய்முறை :

அரிசி மற்றும் உளுந்தை சுத்தம் செய்து 4 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். ஊறியதும் மீண்டும் ஒரு முறை அலசிவிட்டு மிக்ஸியில் நன்றாக  அரைத்துக்கொள்ள வேண்டும்.

பின் அந்த மாவை ஒரு கிண்ணத்தில்  எடுத்துக்கொண்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி , பெருங்காயத்தூள், உப்பு  சேர்த்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும்.

முருங்கை கீரை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள்.!மேலும் செய்திகள்…
பின் கடாயில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட வேண்டும். பின் அவை பொன்னிறமாக மாறியதும் கிண்ணத்தில் எடுத்து போட வேண்டும்.

அவ்வளவுதான் கார போண்டா தயார். இதற்கு காரச்சட்னி, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சிறந்த பதார்த்தமாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்