வெள்ளத்தில் மிதக்கும் Seine-et-Marne மாவட்டம்!

2 ஆவணி 2024 வெள்ளி 06:00 | பார்வைகள் : 6965
Seine-et-Marne மாவட்டத்தில் நேற்று மாலை முதல் தொடர் மழை பெய்துவருவதால் பல நகரங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.
வெள்ள அனர்த்தம் காரணாமாக Seine-et-Marne மாவட்டத்துக்கு ‘செம்மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இரவிரவாக கொட்டித்தீர்த்த மழை காரணமாக தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளன. பல இடங்களில் மகிழுந்துகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
Rebais, La Ferté-Gaucher, Montdauphin, Sablonnières மற்றும் Meilleray ஆகிய பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. அங்கு 2016 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ள அனர்த்தத்துக்கு இணையான ஒரு வெள்ளம் தற்போது ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
சென் நதிக்கரைகளுக்கு அருகே பொதுமக்கள் செல்லவேண்டாம் என மாவட்ட காவல்துறையினர் அறிவுத்தியுள்ளனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1