மத்திய கிழக்கு பிராந்தியங்களுக்கு செல்வோருக்கு எச்சரிக்கை!
2 ஆவணி 2024 வெள்ளி 05:09 | பார்வைகள் : 1398
மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள பதட்டமான சூழ்நிலையை அடுத்து அங்கு பயணிப்பதை தவிர்க்கும்படி அறிவுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக போதிய காரணங்கள் இன்றி இஸ்ரேலுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறும் கோரப்பட்டுள்ளது.
ஓக்ஸ்ட் 1 ஆம் திகதி நேற்று வியாழக்கிழமை இந்த அறிவுத்தலை பிரெஞ்சு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நிலப்பரப்புகள் லெபனான் எல்லை நகரங்களுக்கு போதிய காரணங்கள் இன்றி பயணிக்க வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ விரிவாக்கம் மேற்கொள்ளப்படும் இந்த பகுதிகள் குறித்து மிகவும் விழிப்பாக இருக்கவேண்டும் எனவும், வெளிநாடுகளுக்கு செல்வோர் தங்களது விபரங்களை அரசாங்கத்தின் d'Ariane இல் பதிவு செய்துகொள்வது பரிந்துரைக்கப்படுவதாகவும், இஸ்ரேலின் சில பகுதிகள், காஸா, லெபனான், சிரியா பிராந்தியங்கள் ‘சிவப்பு வலய’ பகுதிகளாக உள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.