நடைமுறையில் மாற்றம்!!

2 ஆவணி 2024 வெள்ளி 05:33 | பார்வைகள் : 6045
பரிஸ் 2024 ஒலிம்பிக போட்டிகளின் சிவப்புப் பகுதிகளில் எந்த விதமான இயந்திர வாகனங்களும் அனுமதிக்கப்படாது என, உள்துறை அமைச்சகம் ஒலிம்பிக் விளையாட்டுக்களின் ஆரம்பத்திற்கு முதலே அறிவுறுத்தியிருந்தது.
தற்போது பிரான்சின் போக்குவரத்து அமைச்சரான பத்ரிஸ் வேர்கிரித் (Patrice Vergriete) இந்த நடைமுறையில் மாற்றங்களை அறிவித்துள்ளார்.
இந்த சிவப்புப் பகுதிகளில் வாடகை சிறுந்துகளான Taxi மற்றும் VTC செல்லாம் எனவும், இவற்றிற்றகு எந்த நிபந்தனைகளும் இல்லை எனவும், தெரவித்துள்ளார்.
இந்த அறிவித்தல் பரிஸ் மாகாண காவற்தறை முதல்வரான லொரோன் நூனெசிற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.