Seine-Saint-Denis : தேடுதல் வேட்டை.. - 145,000 தடைசெய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல்..!
2 ஆவணி 2024 வெள்ளி 08:09 | பார்வைகள் : 3513
Seine-Saint-Denis மாவட்டத்தில் சுங்கவரித்துறையினர் மேற்கொண்ட அதிரடியான தேடுதல் வேட்டையில், விற்பனைத்தடை விதிக்கப்பட்டுள்ள 145,000 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஒலிம்பிக் போட்டிகளை முன்னிட்டு, அதனுடைய பெயர், இலட்சனைகள், நிறங்கள் கொண்ட பல போலியான பொருட்களே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. Seine-Saint-Denis மாவட்டத்தில் உள்ள 17 சேமிப்பங்களில் 80 வரையான சுங்கவரித்துறையினர் ஒரே நேரத்தில் தேடுதலில் ஈடுபட்டனர்.
அதன்போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. டி.சேர்ட்டுக்கள், கைப்பைகள், தொப்பிகள், சப்பாத்துக்கள், நெற்றிப்பட்டைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்திலும், ‘PARIS 2024' அல்லது ஒலிம்பிக் வளையங்கள் பதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.