மருத்துவர்கள் பற்றாக்குறை - விரக்தியின் விளிம்பில் மக்கள்!!
2 ஆவணி 2024 வெள்ளி 09:42 | பார்வைகள் : 3302
பிரான்சின் பல பகுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும், அதனைத் தடுக்கத் தாம் போராடி வருவதாகவும், சோசலிசக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கிய்யோம் கரோ (Guillaume Garot) தெரிவித்துள்ளார்.
தானும் தனது குழுவும் இதற்காகத் தொடர்ந்து போராடுவதாகவும், இதனைத் தடுக்க முடியவில்லை எனவும், தெரிவித்துள்ளார்.
பிரான்சின் பல பகுதிகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையுடன், குறித்த துறைகளிற்கான நிபுணத்துவ மருத்துவர்களை (spécialiste) தேடுவது முடியாத காரியமாக உள்ளது. மருத்துவ வசதி இல்லாமையால் பல மக்கள் விரக்தியின் விளிம்பிற்கே சென்றுள்ளார்கள்.
நானும் எனது குழுவும் கடந்த 20 வருடங்களாக மருத்துவர்களை பிரான்சின் அனைத்துப் பகுதிகளிற்கும் பிரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும், அது முடியாமலே உள்ளது. எதிர்வரும் செப்டெம்பரில் இருந்து, எமது முயற்சி மேலும் தீவிரப்படுத்ப்படும்.
பிரெஞ்சு அரசாங்கமும், அதன் சுகாதார அமைச்ர்களும் கைகiளைரக் கட்டிக்கொண்டு இதற்கான தீர்வைச் சிந்திக்காமல் உள்ளனர்
என கிய்யோம் கரோ தெரிவித்துள்ளார்.