Paristamil Navigation Paristamil advert login

சோம்ப்ஸ்-எலிசேயின் நடனமாடிய காவல்துறை வீரர்..!

சோம்ப்ஸ்-எலிசேயின் நடனமாடிய காவல்துறை வீரர்..!

2 ஆவணி 2024 வெள்ளி 11:25 | பார்வைகள் : 7424


சோம்ப்ஸ்-எலிசேயில் காவல்துறை வீரர் ஒருவர் பெண் ஒருவருடன் இணைந்து நடனமாடிய காட்சி வைரலாக பரவி வருகிறது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கான சிறப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறை வீரர் ஒருவர் பெண் ஒருவர் நடனமாட அழைத்துள்ளார். மெக்ஸிக்கோவைச் சேர்ந்த குறித்த இளம் பெண், வீரரின் கைகளைப் பிடித்து நடனமாட அழைத்துள்ளார்.

சில நொடி தயக்கத்துக்குப் பின்னர் குறித்த காவல்துறை வீரரும் அப்பெண்ணுடன் இணைந்து நடனமாடியிருந்தார். இக்காட்சிகள் காணொளிகளாக பதிவு செய்யப்பட்டு இணையத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்