ஒலிம்பிக் - 200 பேர் கைது!! உள்துறை அமைச்சின் செயலின்மை!!
3 ஆவணி 2024 சனி 09:16 | பார்வைகள் : 2985
ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பித்து ஒரு கிழமை தாண்டியிருக்கும் நிலையில், இன்று தற்காலிக அரசின் உள்துறை அமைச்சர்ஜெரால்ட் தர்மனமன் ஒரு ஊடகச் சந்திப்பை மேற்கொண்டுள்ளார்.
சென் - தெனியில் நடந்த இந்த ஊடகச் சந்திப்பில்
«இந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பரிசில் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன»
«திருட்டுக்கள் 24 சதவீதத்தாலும் சிற்றுந்துத் திருட்டு 10 சதவீதத்தாலும் குறைந்துள்ளன»
«காவற்துறையினரின் அதிகரிப்பினால் குற்றச்செயல்கள் குறைந்துள்ளன»
«பரிசின் சுற்று வட்டாரத்திற்குள் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்»
எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வளவு காவற்துறையினரையும், இராணுவத்தினரையும் குவித்து வைத்தும், சிற்றுந்துத் திருட்டு வெறும் 10 சதவீதமே குறைந்துள்ளன என, ஒரு உள்துறை பெருமையாக வேறு தெரிவித்துள்ளார்.