கனடாவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூடு - ஒருவர் பலி

1 ஆடி 2024 திங்கள் 12:39 | பார்வைகள் : 6459
கனடாவில் எட்மாண்டனின் ப்ரேசர் பகுதியின் என்தனி ஹென்டே பகுதியில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
வாகன விபத்து ஒன்றை மேற்கொண்டு தப்பிச் செல்ல முயற்சித்தவர் மீது பொலிசார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்க பெற்றுள்ளது.
விபத்தினை மேற்கொண்ட நபர் சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
28 வயதான நபரே இவ்வாறு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிசார் கைகலப்பில் ஈடுபட்டதன் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் படுகாயம் அடைந்த குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் பொலிசாருக்கோ அல்லது பொது மக்களுக்கோ காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025