Paristamil Navigation Paristamil advert login

■ மிஸ் பிரான்ஸ் கைகளில் ஒலிம்பிக் தீபம்.. !!

■ மிஸ் பிரான்ஸ் கைகளில் ஒலிம்பிக் தீபம்.. !!

2 ஆடி 2024 செவ்வாய் 09:00 | பார்வைகள் : 6127


இன்று ஜூலை 2 ஆம் திகதி ஒலிம்பிக் தீபம் தனது பயணத்தின் 46 ஆவது கட்டத்தில் உள்ளது. Nord மாவட்டத்தின் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க உள்ளது.

Avesnes-sur-Helpe நகரில் இருந்து இன்று காலை புறப்பட்டுள்ள இந்த தீபம், Dunkirk, Roubaix, Lille மற்றும் Tourcoing போன்ற நகரங்களுக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது. இந்தற்காக குறித்த நகரங்களில் பல்வேறு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.



Lille நகரில் வைத்து 2024 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் ’Eve Gilles’ தனது கரங்களினால் ஒலிம்பிக் தீபத்தை சுமக்க உள்ளார்.



அவருடன் உதைபந்தாட்ட உலக சம்பியனான Raphaël Varane என்பவரும் இந்த தீபத்தினை சுமக்க உள்ளார்.

ஒலிம்பிக் தீபம், மொத்தமாக 400 நகரங்களுக்கு பயணித்து 10,000 பேரினால் சுமக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்