Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

இலங்கையில் சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு

2 ஆடி 2024 செவ்வாய் 06:03 | பார்வைகள் : 218


லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் இன்று செவ்வாய்க்கிழமை (02) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி 12.5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 3,690 ரூபாவாகும். 

5 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 40 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 1,482 ரூபாவாகும்.

அதேவேளை, 2.3 கிலோ கிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 694 ரூபாவாகும்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்