Paristamil Navigation Paristamil advert login

புதிய Guerrilla 450 பைக்கை அறிமுகம் செய்யும் Royal Enfield

புதிய Guerrilla 450 பைக்கை அறிமுகம் செய்யும் Royal Enfield

2 ஆடி 2024 செவ்வாய் 09:23 | பார்வைகள் : 197


ராயல் என்ஃபீல்டின் கெரில்லா-450 பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூலை 17-ஆம் திகதி ஸ்பெயினில் பார்சிலோனா நகரத்தில் நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD) சித்தார்த் லால் மற்றும் தலைமை செயல் அதிகாரி (COO) கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

ராயல் என்ஃபீல்டின் கெரில்லா-450 பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீடு ஜூலை 17-ஆம் திகதி ஸ்பெயினில் பார்சிலோனா நகரத்தில் நடைபெறுகிறது.

இந்த அறிவிப்பை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் (MD) சித்தார்த் லால் மற்றும் தலைமை செயல் அதிகாரி (COO) கோவிந்தராஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Royal Enfield Guerrilla 450, ஹிமாலயன் (Himalayan) போன்ற பல கூறுகளைக் கொண்டுள்ளது. இது சாலையில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

பார்சிலோனாவுக்குப் பிறகு, இந்தியா உட்பட உலகின் பிற நாடுகளிலும் இந்த பைக் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கெரில்லா 450 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.2.30 முதல் 2.40 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம்).

கெரில்லா 450-இன் சில புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் வெளிவந்துள்ளன, அவை இந்த பைக்கின் வன்பொருள் பற்றிய சில தகவல்களைத் தந்துள்ளன.

இந்த புகைப்படங்களின்படி, பைக்கில் single-pod instrument console, round LED headlight, பாரிய fuel tank மற்றும் one-piece seat போன்ற அம்சங்கள் உள்ளன.


பைக்கின் டேங்க் மற்றும் டெயில் பகுதி ஹிமாலயன் 450ஐப் போலவே உள்ளது.

இருப்பினும், சிங்கிள்-பாட் கன்சோல் ஹிமாலயனில் கொடுக்கப்பட்டுள்ள TFT டிஸ்ப்ளேவைப் போன்று இருக்குமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இது தவிர, இந்த பைக்கில் ஹிமாலயனில் கொடுக்கப்பட்ட USD ஃபோர்க்கிற்கு பதிலாக Gated Telescopic Fork அம்சம் வழங்கப்பட்டுள்ளது. 

கெரில்லா 450-யில் 452சிசி ஒற்றை சிலிண்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், இந்த எஞ்சின் புதிய மாடலுக்கு எவ்வாறு டியூன் செய்யப்படும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த என்ஜின் 40எச்பி மற்றும் 40என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸையும் பெறலாம்.

வரவிருக்கும் ராயல் என்ஃபீல்டு கெரில்லா 450 மோட்டார்சைக்கிள், இந்தியாவில் வளர்ந்து வரும் 400+சிசி மோட்டார்சைக்கிள் பிரிவை மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்று கூறப்படுகிறது. இந்த மோட்டார்சைக்கிள் பல்வேறு திறன்களைக் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்கலாம்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்