Paristamil Navigation Paristamil advert login

டொனால்ட் டிரம்பிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நீதிமன்ற தீர்ப்பு!

டொனால்ட் டிரம்பிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நீதிமன்ற தீர்ப்பு!

2 ஆடி 2024 செவ்வாய் 10:17 | பார்வைகள் : 2440


 அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ முடிவுகளை எதிர்த்து ஒருபோதும் வழக்குத் தொடர முடியாது.

அதற்கமைய டொனால்ட் டிரம்புக்கும் இது பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக இருக்கும் போது பணிக்காலத்தை தாண்டி சிறப்புரிமை நீட்டிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் தடைகள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு 6 நீதிபதிகள் உடன்பாட்டுடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த முடிவை அறிவித்த பிறகு, 2020 ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சதியின் கீழ் டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதி தன்யா சுட்கானுக்கு இந்த முடிவு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டொனால்ட் டிரம்ப் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ள அதேவேளை ஜனாதிபதி பைடன் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்