Paristamil Navigation Paristamil advert login

'புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்' இஸ்ரேலுக்கு இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தல்..!

'புதிய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவேண்டாம்' இஸ்ரேலுக்கு இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்தல்..!

3 ஆடி 2024 புதன் 05:19 | பார்வைகள் : 4839


புதிய நடவடிக்கைகள் எதையும் ஆரம்பிக்கவேண்டாம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவிடம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் வலியுறுத்திய்யுள்ளார்.

Khan Younès மற்றும் Rafah பகுதிகளில் இடம்பெற்ற யுத்தத்தில் இதுவரை பல மனித உயிர்கள் பலியானதை அடுத்து, மேலும் புதிய இராணுவ நடவடிக்கைகள் எதையும் ஆரம்பிக்கவேண்டாம் எனவும், தாமதமின்றி போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவரவும் எனவும் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார்.

மனிதாபிமான உதவிகள் வழங்குவதை தடுக்கும் எந்த செயற்பாடுகளிலும் ஈடுபடவேண்டாம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மே மாதம் 7 ஆம் திகதி எகிப்த்தின் எல்லைக்கு அருகே உள்ள Rafah பகுதியில் யுத்த நடவடிக்கை ஒன்றை இஸ்ரேல் ஆரம்பித்திருந்தது. அந்த யுத்தம் முடிவுக்கு வரும் முன்னரே எண்ணற்ற மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, உலகம் முழுவதும் இது தொடர்பாக 'All Eyes on Rafah' (அனைத்து கண்களும் ரஃபாவை நோக்கி) என பெரும் மக்கள் எழுச்சி அலை ஒன்று எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்