Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை அறிமுகம்

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவையை அறிமுகம்

3 ஆடி 2024 புதன் 07:51 | பார்வைகள் : 1136


இலங்கையில் ஸ்டார்லிங்க் (Star Link) செயற்கைக்கோள் இணைய சேவையை அறிமுகப்படுத்துவதற்கு மேலும் ஒரு படி வசதியை பொது நிதிக் குழுவின்,  இலங்கை தொலைத்தொடர்பு (திருத்தம்) சட்டமூலத்துக்கான ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

இதன்படி தற்போதைய சட்டம், 28 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த முறையில் திருத்தப்பட்டுள்ளது.

இது, மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொழில்துறையை ஒழுங்குபடுத்துவதுடன் இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், நாட்டில் உள்ள செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை ஒழுங்குபடுத்த முடியும் என இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் (Kanaka Herath) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு மற்றும் ஏனைய நிறுவனங்களின் அதிகாரிகள் முன்னிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் குறித்த குழு அண்மையில் கூடிய போது, இந்த அனுமதி வழங்கப்பட்டதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த திருத்தத்தின் மூலம், அதிக போட்டி நிறைந்த சந்தையில் நுகர்வோருக்கு நியாயமான ஒரு ஒழுங்குமுறைக்கான வாய்ப்பு உள்ளது.

போட்டி முறையின் கீழ் தொலைத்தொடர்பு அதிர்வெண்களை வழங்குவதற்கான பொறிமுறையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை இந்த சட்டம் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

அத்துடன் இந்த திருத்தங்கள் மூலம், போட்டி சந்தையில் கட்டணங்களைக் குறைப்பதோடு வாடிக்கையாளருக்கு அனுகூலத்தைப் பெற்றுக்கொடுக்க வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்