Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது இரவு முழுவதும் திறக்க மதுபான விடுதிகளுக்கு அனுமதி!!

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நாள் நிகழ்வின் போது இரவு முழுவதும் திறக்க மதுபான விடுதிகளுக்கு அனுமதி!!

3 ஆடி 2024 புதன் 15:15 | பார்வைகள் : 14088


ஒலிம்பிக் மற்றும் பரா-ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நாள் மற்றும் நிறைவு நாட்களில் பரிசில் உள்ள அனைத்து மதுபான விடுதிகளும் இரவு முழுவதும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பரிஸ் காவல்துறை தலைமை அதிகாரி Laurent Nuñez இதனை இன்று புதன்கிழமை அறிவித்தார். ஜூலை 26 - 27 ஆம் திகதிக்குட்பட்ட இரவிலும், ஓகஸ்ட் 11 - 12 ஆம் திகதிக்குட்பட்ட இரவிலும் மேலும், ஓகஸ்ட் 29 - 29 ஆம் திகதிக்குட்பட்ட இரவிலும் இந்த மதுபான விடுதிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 15,000 விடுதிகள் இதனால் பலனடைய முடியும் எனவும், அத்தோடு, துரித உணவுகள் (restauration rapide) போன்றவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வழமையாக இரவு 10 மணி வரைக்குமே அவற்றுக்கு அனுமதி அளிக்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்